தேடல்

Results

Wednesday, 20 June 2018

தொலைந்துபோன சைக்கிள்

ஒரு சின்னப் பாப்பாவோட சைக்கிள் தொலைச்சிபோச்சி...
அந்த பாப்பா சிவன் கோயிலுக்கு போய் சிவன்கிட்ட வேண்டிகிச்சி ...
"சாமி எனக்கு என் சைக்கிள் கிடைக்கனும்" அப்படின்னு...
ஆனா, 10நாள் ஆகியும்
அந்தப் பாப்பாக்கு சைக்கிள் கிடைக்கல..
11வது நாள் சிவன் கோயிலுக்கு அந்தப்
பாப்பா கோவமா வந்துச்சு...
வாசல்ல இருந்த சின்னப்”பிள்ளையார்” சிலைய
யாருக்கும் தெரியாம எடுத்துட்டு....
உண்டியல்ல ஒரு லெட்டர் ஒன்ன
போட்டுட்டு போயிடுச்சு.....
அந்த லெட்டர்ல என்னஎழுதிருந்தது தெரியுமா?
“இன்னைக்கு நைட்டுக்குள்ள, என் சைக்கிளோட
என் வீட்டுக்கு வந்தீன்னா, உன் பையன
நா உன்கிட்ட ஒப்படைக்கிறேன். ....
இல்லேன்னா

Tuesday, 19 June 2018

டாக்டரான இன்ஞ்ச்னியர்

இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்..
வாசலில் ஒரு போர்டு எழுதினார்.
"எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் "
இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.
"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில .."
" நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்
நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு " அய்யோ டாக்டர் இது பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர்.
" வெரி குட் .இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது ..500 ரூபாய் ஃபீசை எடுங்கள் "
உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.
ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.
" டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க " என்றார்.
" நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்.
" அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே " என்று அலறினார் இவர்..
" வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க "
இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார் .
" எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்"
" சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர்
"இது 500 ரூபாய் நோட்டாச்சே " என்று பதறினார் இவர்.
" வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய் "

Tuesday, 29 May 2018

நெஞ்சு வலி

நெஞ்சி பக்கம் வலிக்கு டாக்டர்
ஸ்டென்ட் வைக்கணும் 3லச்சம் செலவாவும் துட்டு இருக்கா
பத்து பைசா இல்ல டாக்டர்
அப்ப இந்தா கேஸ் ட்ரபில் மாத்திரை இத போடு சரியா போவும்

Saturday, 19 May 2018

நல்ல பிச்சைக்காரன்

#பிச்சைக்காரன் - "சாப்பாடு கொடுங்க சாமி!"
#இவன்: "கவலைப்படாதே! உனக்கு சரக்கே தர்றேன்..."
பிச்சை: "எனக்கு #குடிக்கற பழக்கம் இல்லை சாமி!"
இவன்: "சரி, #சிகரெட் தர்றேன்!"
பிச்சை: "அதுவும் #பழக்கம்இல்லை!"
இவன்: "சரி, வா! கிண்டி #குதிரைரேஸுக்கு போவோம்..."
பிச்சை: "எனக்கு #சூதாட்டமும் பிடிக்காது சாமி!"
இவன்: "சரி, உனக்கு #ஒருகாதலி செட் பண்ணிடுவோம்!"
பிச்சை: "ஐய்யய்யோ! எனக்கு மனைவி மட்டும்தான் #உசுரு!"
இவன்: "சரி, உனக்கு நீ கேட்ட மாதிரி #சாப்பாடேதர்றேன்! அதுக்கு முன்னாடி நீ என் வீட்டுக்கு வரணும்.."
பிச்சை: "#ஏன்சாமி?"
இவன்: "குடிக்காம, சிகரெட் பிடிக்காம, சூதாடாம, வெறுமனே பொண்டாட்டியை மட்டும் #நேசிச்சா, ஒருத்தன் என்ன கதிக்கு ஆளாவான்னு உன்னைக் காண்பிச்சு #என்மனைவிக்கு_உணர்த்தணும்!!"😁😁/ct

Thursday, 17 May 2018

மருந்துக்கடை

*மருந்துக் கடையில் தமிழாசிரியர் : என் பாவங்களைத் தூக்கி எறியும் மாத்திரை ஒண்ணு குடுங்க!*
*கடைக்காரர் : என்ன கேக்கறீங்க சார்? புரியலையே? அப்படி ஒரு மாத்திரை இருக்கா?*
*தமிழாசிரியர் : எனக்கு ஆங்கிலம் பிடிக்காது. இருந்தாலும் சொல்லித் தொலைக்கறேன். 'எறி த்ரோ மை சின்' . இப்போ புரியுதா?*

Monday, 7 May 2018

பெஞ்சு மீது நிற்க வைத்தார்

பக்தாளின் மகனை வாத்தியார் பெஞ்சு மீது நிற்க வைத்துவிட்டார் எனப் புகார்.
ஏன்டா என்ன செய்தாய் என மகனிடம் கேட்டார் பக்தாள்
ஹரப்பா எங்கே இருக்கிறது என்று கேட்டார் வாத்தியார்.எனக்கு தெரியவில்லை.அதான் பெஞ்சு மீது நிற்க வைத்தார் என்றான் மகன்.
என்னப்பா இனிமேலாவது எந்தச் சாமானை எந்த இடத்தில் வைத்தாய் என நினைவு படுத்திக் கொள்.கேட்டவுடன் கொடுப்பது தானே நல்ல பிள்ளைக்கு அழகு என்றார் பையனிடம் பக்தாள்

சத்தம் வராம செய்யனும்

கோவில் மணியைத் திருடி விற்க நினைத்தான் பக்தாள்.
அது மிகவும் பளுவாக இருந்தது.
உடைத்து நொறுக்கி எடுத்துச் செல்வோம் என்று நினைத்தான்
உடைத்தால் சத்தம் கேட்டு ஆட்கள் வந்துவிடுவார்கள் என்று நினைத்தான்.
எனவே தன் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டு உடைக்க ஆரம்பித்தான்
எல்லாரும் ஓடிவந்து பிடித்து நல்ல செருப்படி கொடுத்தார்கள்
துப்பாக்கியில் சைலன்சர் மாட்டிக்கிட்டு சுட்டா
சாகுறவனும் சத்தம் போடாமச் சாவான்னு நினைக்கிற தியரியே பக்தாள் தியரி.

Total Pageviews