புத்திசாலிகள் சூழ்ந்திருந்தால்

#இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்த #நரேந்திர மோடி
"உங்கள் மாட்சிமை தங்கிய அதிகாரத்தில் நீங்கள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது #யோசனை சொல்ல முடியுமா?" என்றார்.
"சரி" என்ற ராணி, "அதற்கு #புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
மோடி குழப்பமாகி, "ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் புத்திசாலி என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?" என்றார்.
ராணி, "மிக எளிது; நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே,
இண்டர்காம் பொத்தானை அழுத்தி, "#டேவிட் கேமரூன், தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?" என்றார்.
#டேவிட் கேமரூன் அறைக்குள் வந்து, "சொல்லுங்கள் அம்மா" என்றார்.
#ராணி சிரித்துக் கொண்டே கேட்டார், "டேவிட், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?"
ஒரு கணமும் யோசிக்காமல், டேவிட் கேமரூன், "அது நான்தான் மேடம்" என்றார்.
"நன்றி டேவிட் !" என்று கூறி ராணி அவரை அனுப்பி விட்டு, புன்னகையுடன் மோடி பக்கம் திரும்பி
"பார்த்தீர்களா?" என்றார்.
மோடி தன்னுடைய சுற்றுப் பயணத்தில், தெரியாமல் மீண்டும் இந்தியா வந்தவுடன் #அமித் ஷாவிடம் கேட்டார்,
"அமித், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?"
"உறுதியா தெரியல; நாளைக்கு சொல்றேன்" என்ற அமித் ஷா டவுசர் அனைவரிடமும் கேட்டும் பதில் தெரியாததால் #அரவிந்த்கேஜ்ரிவாலிடம் ஓடி,
"நீங்கள் ஒரு புதிருக்கு பதில் சொல்ல வேண்டும். உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?" என்று கேட்டார்.
கேஜ்ரிவால், "அது நான்தான்!" என்றார்.
விஷயத்தை கேள்விப்பட்ட #அமித் ஷா மோடியிடம் ஓடி,
"எனக்கு விடை தெரியும்" என்றார்.
"சொல்லு".
மோடி அவரைக் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னார்,
முட்டாள்! அது #டேவிட்_கேமரூன் டா!"😁😁😁😁

39ஆம் எண் அறை

ஒரு அழகிய வாலிபன் ஒரு ஹோட்டலுக்குச் சென்று முதலாளியை சந்திக்க விரும்புவதாகக் கூறினான். முதலாளி வந்தவுடன் அவரிடம்.....
"39ம் நம்பர் அறை கிடைக்குமா?"
"கண்டிப்பாக சார்....."
"நன்றி...."
அந்த அறைக்குச் செல்வதற்கு முன் முதலாளியிடம் ஒரு கறுப்பு கத்தி, 39செமீ நீள வெள்ளை நூல் மற்றும் 73கி ஆரஞ்சு ஒன்று தரச் சொல்லி கேட்டான்.
இதைக் கேட்ட முதலாளி மிகுந்த ஆச்சரியத்துடன் ஒத்துக் கொண்டார்.
அறைக்குச் சென்ற அந்த வாலிபன் அதன் பின் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை.
இதில் ஆச்சரியமான ஒன்று எதுவென்றால் முதலாளியின் அறை 39ம் அறைக்கு அருகில்.
நடுநிசியைத் தாண்டியவுடன் முதலாளிக்கு பக்கத்து அறையிலிருந்து பல வினோத சப்தங்கள் கேட்டது. காட்டு மிருகங்களின் கத்தல் மற்றும் பாத்திரங்கள் உருளும் சப்தம் என விதவிதமான ஒலிகள்.
அன்று இரவு முழுவதும் முதலாளி உறங்கவில்லை. விதவிதமான ஒலிக்கு காரணத்தை யோசித்தம் விடை கிடைக்கவில்லை.
அடுத்த நாள் காலை அந்த இளைஞன் அறையைக் காலி செய்து சாவியைக் கொடுத்தவுடன் முதலாளி அந்த அறையை செக் பண்ண சொன்னார்.
அந்த அறை மிகவும் சுத்தமாக பொருட்கள் அதனதன் இடத்தில் இருந்தது. அங்கிருந்த மேசையில் அந்த கறுப்பு கத்தி, வெள்ளை நூல் மற்றும் ஆரஞ்சும் இருந்தது.
பின் அந்த இளைஞன் பில்லை செட்டில் செய்து விட்டு ரூம் பாய்ஸ்க்கும் நல்ல டிப்ஸ் கொடுத்து புன்னகையுடன் கிளம்பி விட்டான்.
முதலாளி இதில் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் அவன் மேல் மிகுந்த சந்தேகமும் அடைந்தார்.
ஒருவருடத்திற்குப் பின் மீண்டும் வந்த அந்த இளைஞன் அதே அறையைக் கேட்டதோடு மட்டும் அல்லாமல் போன முறை போல் கறுப்புக் கத்தி, 39 செமீ வெள்ளை நூல் மற்றும் 73கி ஆரஞ்சும் கேட்டான்.
இந்த முறை எப்படியாவது உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும் என முதலாளி தூக்கம் விழித்து காத்திருந்தார். கடந்த முறை போலவே நடுநிசியைத் தாண்டியவுடன் அதே போல சப்தங்கள் பக்கத்து அறையிலிருந்து வரத் தொடங்கின ஆனால் இந்த முறை கடந்த வருடத்தை விட அதிகமாக இருந்தது.
அடுத்த நாள் முகம் முழுதும் பன்னகையுடன் கை நிறைய டிப்ஸ் கொடுத்து பில்லை செட்டில் செய்து விட்டு அவன் கிளம்பினான்.
இதற்கான காரணங்களை முதலாளி ஆராயத் தொடங்கினார். எதற்காக 39ம் நம்பர் ரூம் எதற்கு கறுப்பு கத்தி வெள்ளை நூல் ஆரஞ்சு என எவ்வளவு மண்டையை உடைத்துக் கொண்டும் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
முதலாளி மிகுந்த ஆர்வத்துடன் அடுத்த வருட மார்ச் மாதத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார். ஆச்சரியமாக மார்ச் முதல் தேதியே அந்த இளைஞன் வந்தான்.
இந்த முறையும் அதே அறை மற்றும் அதே பொருட்களுடன் அறைக்குள் சென்றான்.
அந்த நாள் இரவும் அதே போல பல சப்தங்களோடு முதலாளிக்கு கழிந்தது.
அடுத்த நாள் அந்த இளைஞன் அறையைக் காலி செய்து விட்டு புறப்படுவதற்கு முன் முதலாளி பணிவுடன் அவனிடம் சப்தங்களுக்கான காரணத்தைக் கேட்க அதற்கு அவன்.....
"இந்த உண்மையை உங்களுக்கு சொல்ல வேண்டும் எனில் நீங்கள் கண்டிப்பாக யாரிடமும் சொல்லக் கூடாது...."
"கண்டிப்பாக யாரிடமும் சொல்ல மாட்டேன்..."
"சத்தியமாக......."
"சத்தியமாக யாரிடமும் சொல்ல மாட்டேன்...."
அதற்குப் பின் அவன் சப்தங்களுக்கான காரணத்தை முதலாளியிடம் சொன்னான்.
ஆனா அந்த முதலாளி என்னை மாதிரியே ரொம்ப நம்பிக்கையான ஆளுங்கறதுனால இன்னமும் எங்கிட்ட அந்த இரகசியத்தை சொல்லலை.
அவர் சொன்னோன கண்டிப்பா நான் உங்களுக்கும் சொல்லிடுறேன்......
😝😝😝

பொறுப்பு இல்லாத நாய்

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..
கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...
கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..
. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..
அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...
பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...
கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..
ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..
கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..
இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...
கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...
நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...
கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...
நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....
கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???
அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது

தொலைந்துபோன சைக்கிள்

ஒரு சின்னப் பாப்பாவோட சைக்கிள் தொலைச்சிபோச்சி...
அந்த பாப்பா சிவன் கோயிலுக்கு போய் சிவன்கிட்ட வேண்டிகிச்சி ...
"சாமி எனக்கு என் சைக்கிள் கிடைக்கனும்" அப்படின்னு...
ஆனா, 10நாள் ஆகியும்
அந்தப் பாப்பாக்கு சைக்கிள் கிடைக்கல..
11வது நாள் சிவன் கோயிலுக்கு அந்தப்
பாப்பா கோவமா வந்துச்சு...
வாசல்ல இருந்த சின்னப்”பிள்ளையார்” சிலைய
யாருக்கும் தெரியாம எடுத்துட்டு....
உண்டியல்ல ஒரு லெட்டர் ஒன்ன
போட்டுட்டு போயிடுச்சு.....
அந்த லெட்டர்ல என்னஎழுதிருந்தது தெரியுமா?
“இன்னைக்கு நைட்டுக்குள்ள, என் சைக்கிளோட
என் வீட்டுக்கு வந்தீன்னா, உன் பையன
நா உன்கிட்ட ஒப்படைக்கிறேன். ....
இல்லேன்னா

டாக்டரான இன்ஞ்ச்னியர்

இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்..
வாசலில் ஒரு போர்டு எழுதினார்.
"எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் "
இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.
"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில .."
" நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்
நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு " அய்யோ டாக்டர் இது பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர்.
" வெரி குட் .இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது ..500 ரூபாய் ஃபீசை எடுங்கள் "
உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.
ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.
" டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க " என்றார்.
" நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்.
" அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே " என்று அலறினார் இவர்..
" வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க "
இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார் .
" எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்"
" சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர்
"இது 500 ரூபாய் நோட்டாச்சே " என்று பதறினார் இவர்.
" வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய் "

நெஞ்சு வலி

நெஞ்சி பக்கம் வலிக்கு டாக்டர்
ஸ்டென்ட் வைக்கணும் 3லச்சம் செலவாவும் துட்டு இருக்கா
பத்து பைசா இல்ல டாக்டர்
அப்ப இந்தா கேஸ் ட்ரபில் மாத்திரை இத போடு சரியா போவும்

மருந்துக்கடை

*மருந்துக் கடையில் தமிழாசிரியர் : என் பாவங்களைத் தூக்கி எறியும் மாத்திரை ஒண்ணு குடுங்க!*
*கடைக்காரர் : என்ன கேக்கறீங்க சார்? புரியலையே? அப்படி ஒரு மாத்திரை இருக்கா?*
*தமிழாசிரியர் : எனக்கு ஆங்கிலம் பிடிக்காது. இருந்தாலும் சொல்லித் தொலைக்கறேன். 'எறி த்ரோ மை சின்' . இப்போ புரியுதா?*

பெஞ்சு மீது நிற்க வைத்தார்

பக்தாளின் மகனை வாத்தியார் பெஞ்சு மீது நிற்க வைத்துவிட்டார் எனப் புகார்.
ஏன்டா என்ன செய்தாய் என மகனிடம் கேட்டார் பக்தாள்
ஹரப்பா எங்கே இருக்கிறது என்று கேட்டார் வாத்தியார்.எனக்கு தெரியவில்லை.அதான் பெஞ்சு மீது நிற்க வைத்தார் என்றான் மகன்.
என்னப்பா இனிமேலாவது எந்தச் சாமானை எந்த இடத்தில் வைத்தாய் என நினைவு படுத்திக் கொள்.கேட்டவுடன் கொடுப்பது தானே நல்ல பிள்ளைக்கு அழகு என்றார் பையனிடம் பக்தாள்

சத்தம் வராம செய்யனும்

கோவில் மணியைத் திருடி விற்க நினைத்தான் பக்தாள்.
அது மிகவும் பளுவாக இருந்தது.
உடைத்து நொறுக்கி எடுத்துச் செல்வோம் என்று நினைத்தான்
உடைத்தால் சத்தம் கேட்டு ஆட்கள் வந்துவிடுவார்கள் என்று நினைத்தான்.
எனவே தன் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டு உடைக்க ஆரம்பித்தான்
எல்லாரும் ஓடிவந்து பிடித்து நல்ல செருப்படி கொடுத்தார்கள்
துப்பாக்கியில் சைலன்சர் மாட்டிக்கிட்டு சுட்டா
சாகுறவனும் சத்தம் போடாமச் சாவான்னு நினைக்கிற தியரியே பக்தாள் தியரி.

வீடுகட்டிய பக்தாள்

பக்தாள் வீடுகட்ட நினைத்தார்.
பொறியாளரை அணுகினார்.
தரைத்தளம் கட்ட பத்து லட்சமும்
மாடி கட்ட ஐந்து லட்சமும் ஆகும் என்றார் பொறியாளர்.
மாடி மட்டும் கட்டித்தாருங்கள் என்றான் பக்தாள்.

பாவாடை பக்தாள்

பக்தாளுக்கு பாவாடை என்கிற சொல் ஆகாது
பக்தாள் இப்போது ஆற்றிற்கு குளிக்கப் போனான்.
கரையில் துணியைக் கழட்டி வைத்தான்.
லங்கோடு மட்டும் தான் கட்டுவான் பக்தாள்.
ஜட்டி வெளிநாட்டுக்காரன் கண்டுபிடித்ததால் அதில் அவனுக்கு பெரிதாக ஆர்வம் இல்லை.
அவனது துணியை குரங்கு தூங்கிட்டு போயிருச்சு.
லங்கோடும் ஆத்தோடு போயிருச்சு.
இப்போது செய்வது அறியாது திகைத்தான் பக்தாள்.
கரையில் ஒரு பெண்ணின் பாவாடை கிடந்தது.
கிடுங்காமணியை ஆட்டிக் கொண்டு அம்மணமாக ஊருக்குள் செல்வதைவிட பாவாடையை மாட்டிக் கொண்டு போக மனதைக் கல்லாக்கி முடிவெடுத்தான்.
பாவாடையை மார்பு வரை கட்டிக் கொண்டு ஓடினான்.
நாய் துரத்தத் தொடங்கியது.
ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான்.
மரத்தடியில் பாவாடையுடன் பக்தாள் நின்றதைப் பார்த்த மக்கள் அவனை வழிபடத் தொடங்கினர்.
(இந்த லூசுப்பயலுக எதைத்தான் வழிபடாமல் இருந்தார்கள்?)
அன்றிலிருந்து அவன் "பாவாடை சாமி" என்று அறியப்படுகிறான்.

கடிகாரம்

பக்தாள் கடிகாரம் வாங்கினான்.
ஒரு சில நாட்களிலேயே கடிகாரம் நின்றுவிட்டது.
பக்தாளுக்கு கடைகாரன் மேல் கடுங்கோபம்.
கடைக்குச் சென்று கடிகாரம் ஓடல என்றான்.
கடிகாரம் எங்கே என்றான் கடைகாரன்.
கடிகாரத்தை ஒன்னும் செய்ய வேண்டாம்.
இந்த முள் தான் ஓடல என்று கடிகார முள்ளை நீட்டினான் பக்தாள்.
இப்போது கடைகாரன் கடையை விட்டே ஓடத் தொடங்கினான்

ஆர் எஸ் எஸ் படத்தின் ஓப்பனிங் சீன்

ஆலமரத்தின் அடியில் நிறையப் பேர் அமர்ந்திருக்கிறார்கள்.
இங்கு பெரிய பொய் சொல்லுகிறவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று நாட்டாமை சொல்கிறார்.
எல்லோரும் பொய் பொய்யாகச் சொல்லி அசத்துகிறார்கள்.
அதில் இருந்த பக்தாள் மட்டும் போட்டியில் பங்கேற்கவில்லை.
நாட்டாமை அவனைப் பார்த்து நீ ஏன் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று கேட்கிறார்.
நான் இதுவரை பொய்யே பேசியதில்லை என்று ஷாப்ட்டா பதில் சொல்லுறான் பக்தாள்.
சொன்ன பொய்யிலேயே இதுதான் சிறந்த பொய் என நாட்டாமை சொல்லிவிட்டு பரிசை பக்தாளுக்கு வழங்குகிறார்.
அந்தப் பரிசுக் கோப்பையை பக்தாள் பெறும் போது படத்தோட டைட்டிலான "அதிர வைக்கும் ஆர் எஸ் எஸ் வரலாறு"ன்னு போடுறாங்க.

சோம்பேறி பக்தாள்

இரண்டு சோம்பேறி பக்தாள் கோவிலுக்கு அருகே இருந்த நாவல் மரம் கீழே படுத்திருந்தனர்.
நாவல் பழம் ஒன்று ஒரு பக்தாளின் வாயில் பட்டு பக்கவாட்டில் விழுந்தது.
ருசியாக இருந்தது.
ஆனால் கையால் எடுத்து வாயில் போட சோம்பேறித்தனம்.
பக்கத்தில் படுத்திருந்த பக்தாளிடம் அந்தப் பழத்தை எடுத்து என் வாயில் வை என்றான்.
அதற்கு மற்றொரு பக்தாள் கொஞ்ச நேரம் முன்னால் நாய் என் வாயை நக்கிய போது உன்னை விரட்டச் சொன்னேனே நீ அதைச் செய்தாயா?
நான் பழத்தை எடுத்து வாயில் வைக்கமாட்டேன் என்றான்.

மானமுள்ள இந்து

மானமுள்ள இந்துவானால் ரதயாத்திரைக்கு வா என்ற செய்தியைப் பார்த்தார் பக்தாள்.
ரதயாத்திரைக்குப் புறப்பட்டார்.
வழியில் பக்தாளின் நண்பன் இடைமறித்து எங்கே போகிறாய் என்றான்.
செய்தியைச் சொன்னார் பக்தாள்.
அது மானமுள்ள இந்துக்கு தானே
உனக்கு என்ன என்று கேட்டான் நண்பன்.
ஆமால்ல என்று வீட்டுக்கு திரும்பிவிட்டார் பக்தாள்.
இப்போது வீட்டிற்கு வந்து யோசித்தார்.
நாம் ஏன் திரும்பி வந்தோம் என்று.

தெக்காம போகுதா?

பக்தாள் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏற நின்றார்
பஸ் வந்தது
கண்டக்டரிடம் பஸ் தெக்காம போகுதா வடக்காம போகுதா என்று கேட்டார்.
கிழக்காம போகுது என்றார் கண்டக்டர்
நீ எங்கே போகணும் என்று பக்தாளிடம் கேட்டார் கண்டக்டர்
நான் மேற்காம போகணும் என்றார் பக்தாள்

பக்தாளின் அம்மா

பக்தாள் நண்பனின் அம்மா இறந்து போனார்.
பக்தாள் அங்கு சென்றான்.
நண்பனோ கதறி கதறி அழுதான்.
அவனது அன்பை எல்லோரும் பார்த்து வியந்தார்கள்.
அதைப் பார்த்த பக்தாளுக்கு நண்பன் மீது பொறாமை வந்துவிட்டது.
வீட்டுக்கு வந்து அவன் அம்மாவைப் பார்த்தான்.
நண்பன் அவனது அம்மா இறந்ததால் அழுது பெயர் வாங்கிவிட்டான்.
நான் அதை முந்த வேண்டும்.
எனவே நீ உடனே சாவு என்றான் அவனது அம்மாவிடம்.

கலர் படம்

பக்தாள் படம் பார்க்கப் போனான்.
திடீரென திரையில் தீப்பிடித்தது.
எல்லோரும் அலறி ஓடினர்.
ஆனால் பக்தாள் ஓடவில்லை.
அவன் தான் டிபரண்ட் டைப்பாச்சே.
அருகில் இருந்தவன் யோவ் தீப்பிடிக்குதய்யா சீக்கிரமா வா என்றான்.
பக்தாள் அவனிடம் இது கலர் படம் எனத் தெரியாமல் எல்லோரும் அவசரப்பட்டு ஓடுகிறார்கள் என்றான்.
எல்லோரும் ஓடிவிட்டனர்
கலர் படம் என நினைத்த பக்தாள் இப்போது கரிகட்டையாக நின்றான்.

ட்ரெய்ன் பக்தாள்

பக்தாள் ட்ரெய்ன் ஏற ரயில் நிலையம் சென்றான்.
அவன் செல்லும் ரயில் ஒன்னாவது ப்ளாட்பாரத்தில் வருகிறது என்று அறிவிக்கப்பட்டது.
ப்ளாட்பாரத்தில் தான் ட்ரெய்ன் வருதோன்னு நெனச்சு தண்டவாளத்தில் குதித்தான் பக்தாள்.
ட்ரெய்ன் பக்தாளுக்கு அருளியது

சிகரெட் பக்தாள்

பக்தாள் முட்டாள் மட்டும் அல்ல.
மண்டக்கிரகம் புடிச்சவனும் கூட.
பக்தாள் நிறைய சிகரெட் பிடிப்பான்.
புகை பிடிப்பது உடலுக்கு கேடு
சிகரெட்டை குறைத்துக் கொள் என்றான் நண்பன்.
சிகரெட்டை நான் குடிக்கும் போது பார்த்ததில்லையா?
அது எரியும் போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத்தானே செய்கிறது என்றான்.

அபூர்வ மனிதன்

ஒற்றைக்கண் உள்ள மனிதர்கள் காட்டில் வாழ்வதாகக் கேள்விப்பட்டான் பக்தாள்.
அதில் ஒருவனைப் பிடித்து வந்து சந்தையில் நிறுத்தி காசு பார்த்துவிட வேண்டும் என நினைத்து காட்டுக்குப் போனான்.
காட்டிற்குள் ஒற்றைக்கண் மனிதர்களைப் பார்த்துவிட்டான்.
ஒருவனை பிடிக்கப் போனான் பக்தாள்.
அவர்கள் எல்லோரும் பக்தாளைப் பிடித்து இவனுக்கு இரண்டு கண் இருக்கிறது என்று அந்த ஊர் சந்தையில் நிறுத்திவிட்டார்கள்.
பக்தாள் பக்கி இப்போது பதறி நின்றது

அமெரிக்கா பக்தாள்

பக்தாள் பலர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டனர் என்று தெரியும்
அமெரிக்கப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு இந்தியா வந்தான் பக்தாள் ஒருவன்.
அவன் பள்ளி ஆசிரியர் அவனைப் பார்த்துவிட்டு
என்னடா இந்தியப் பெண் கிடைக்கலயான்னு கேட்டார்.
பக்தாள் பதில் இதுதான்.
இந்தியா என் தாய் நாடு
இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர்னு நீங்க சொல்லி
நான் அதை உறுதிமொழி எடுத்துன்னு சொல்லிருக்கான்.
பள்ளி ஆசிரியர் பக்தாளைப் பார்த்து போடா பன்னிப்பயலேன்னு சொல்லி நகர்ந்தார்.

ஐபிஎல்

பக்தாள் ஐபிஎல் மேட்ச் பாக்க டிவியைப் போட்டான்.
டிவியில் கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் கொண்டு செல்லக்கூடாத பொருட்கள் குறித்து சொல்லப்பட்டது.
வீட்டில் இருந்த அந்தப் பொருட்களையெல்லாம் எடுத்து வீதியில் போட்டுவிட்டு டிவியில் கிரிக்கெட் பார்த்தான்.
கடமை என்று வந்துவிட்டால் எருமையாக மாறிவிடுவது பக்தாள் இயல்பு.

கடவுளுக்காக

பக்தாள் கோவில் பூசாரி.
நடையை சாத்திவிட்டு கிளம்பினார்.
ஒருவன் ஓடிவந்து புதிய இரண்டாயிரம் நோட்டைக் கொடுத்து தனக்காக அர்ச்சனை செய்யச் சொன்னான்.
சரி எதற்காக அர்ச்சனை என்றார் பூசாரி
உத்திரபிரதேசத்துக்கு அனுப்பிய கஞ்சா நல்லபடியா போய் சேந்திருச்சு.அதற்காகத்தான் என்றான்.
அப்புடின்னா லாபத்தில் கடவுளுக்கு சரி பங்கு வேண்டும் என்றான் பக்தாள்.
பக்தாள் எப்போதும் தனக்காக கேட்பதில்லை
கடவுளுக்காகவே கேட்பார்

வீட்ல ஆள் இல்ல

பக்தாள் வீட்டுக்கு பிச்சைக்காரன் வந்தான்.
அய்யா தர்மம் போடுங்கய்யா என்றான்.
வீட்டில் ஆள் இல்லை போயிட்டு வா என்றான் பக்தாள்.
பிச்சைக்காரனோ உங்க வீட்டு ஆள்கள் எனக்கு வேண்டாம்யா
ஒரு ரூபாய் கொடுங்க போதும் என்றான்.
பக்தாள் பிச்சைக்காரன்ட்டயும் பவர் புல்லா பேச ட்ரைப் பண்ணுவான்.
ஆனா பல்பு வாங்குவான்.

பத்திரப்பதிவு

பக்தாள் சொத்து வாங்க நினைத்தான்.
ரியல் எஸ்டேட் புரோக்கரை அணுகினான்.
தண்ணி வசதியும் சுத்தி காம்பவுண்ட் போட்டு பாதுகாப்பா உள்ள நல்ல இடம் வேண்டும் என்றான் பக்தாள்.
பக்தாளைப் பற்றி நன்கு தெரிந்த புரோக்கர் ஒரு இடத்தைக் காட்டினான்.
பத்திரப்பதிவு நடந்து முடிந்தது.
சொத்து வாங்கிய இடத்தைப் பார்க்கப் போனான் பக்தாள்.
பக்தாள் இடத்தைப் பார்த்து அதிர்ந்து போனான்.
அது கோவில் தெப்பக்குளம்.
புரோக்கர் முதலில் காட்டிய இடம் வேறு.
பதிந்த இடம் வேறு.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி பக்தாள் வீட்டிற்கு வந்தார்.
வயதைக் கேட்டார்.
பக்தாள் 40 என்றான்.
கடந்த முறை கணக்கெடுக்கும் போதும் 40 தானே சொன்னீர்கள் என்றார் அதிகாரி.
என்னிடம் அன்றைக்கு ஒரு பேச்சு. இன்றைக்கு ஒரு பேச்செல்லாம் கிடையாது.என்றைக்கும் ஒரே பேச்சுதான் என்றான் பக்தாள்.
பக்தாள் எப்போதும் ஒரே பேச்சுதான் பேசுவார்கள்.
பக்தாள் கதைகள் தொடரும்

தில்லி ஸ்டேஷன்

பக்தாள் கட்சி ஆட்சியைப் பிடித்துவிட்டது
பக்தாளுக்கு பரம சந்தோசம்.
பதவியேற்பு விழாவுக்கு ரயிலில் டெல்லிக்கு புறப்பட்டான் பக்தாள்.
ரயிலில் உடன் வந்த பயணி ரேடியோவில் பாட்டுக் கேட்டான்.
அதில் ஆல் இண்டியா ரேடியோ டெல்லி ஸ்டேசன் என்றது.
டெல்லி வந்துவிட்டது என நினைத்து கீழே இறங்கிவிட்டான் பக்தாள்.
ஆனால் அது நாக்பூர்.
நாக்பூர் போய் சேர்ந்த பக்தாள் கதைகள் இப்படித்தான்.

ரேடியோ

பக்தாள் ரேடியோ வாங்கக் கடைக்குப் போனார்
பிலிப்ஸ் ரேடியோ கேட்டார்
கடைகாரரும் பிலிப்ஸ் ரேடியோ கொடுத்தார்.
வீட்டில் வந்து ரேடியோவைப் போட்டார் பக்தாள்
அது ஆல் இண்டியா ரேடியோ என்றது.
பக்தாள் கடைகாரரிடம் போய் நான் பிலிப்ஸ் ரேடியோ கேட்டேன்
நீயோ ஆல் இண்டியா ரேடியோ கொடுத்துவிட்டாய் எனத் திட்டினான்.
ரேடியோ பொய் சொல்லுமாய்யா எனச் சொல்லிவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு பெருமிதத்துடன் திரும்பினார் பக்தாள்

பண்ணையார்

பக்தாள் தன்னை பண்ணையார் என அழைப்பதை மிகவும் விரும்புவான்.
பலரும் அவனை பண்ணையார் என அழைக்கத் தொடங்கினார்கள்.
ஒரு அறிவாளி பக்தாளை அய்யா வணக்கம் என்றான்.
பண்ணையார் என ஏன் அழைக்கவில்லை என கடிந்து கொண்டான் பக்தாள்.
அய்யா உங்களை எல்லோரும் மனதிற்குள் திட்டுகிறார்கள் என்பதை நீங்கள் அறியவில்லை என்றான் அறிவாளி.
எப்படி எனக் கேட்டான் பக்தாள்.
பண்ணையில் யார் இருப்பார்கள்?
எருமைமாடுகள் தானே இருக்கும் என்றான் அறிவாளி.
பண்ணையாரும் எருமைமாடும் ஒன்றுதான்.

பக்தாளுக்கு டிவி கிடையாது

பக்தாள் டிவி வாங்க கடைக்குப் போனான்.
அந்த டிவி என்ன விலை என்று கேட்டான்.
பக்தாள் உருவத்தைப் பார்த்த கடைக்காரன் பக்தாளுக்கெல்லாம் டிவி கொடுக்கிறதில்லை என்றான்.
பக்தாள் மீண்டும் மாறு வேடத்தில் அந்தக் கடைக்கு போனான்.
அந்த டிவி என்ன விலை என்றான்.
இப்போதும் கடைக்காரன் பக்தாளுக்கு டிவி கொடுக்கிறதில்லை என்றான்.
பக்தாளுக்கு இப்போது கடும் கோபம்.
ஏன் எனக்கு தரமாட்டேன் என்கிறாய் என்றான் பக்தாள்.
அவன் டிவி எனக் காட்டியது டிவி இல்லை.
மைக்ரோ ஓவன்.

பக்தாள் சோதித்து திடம் சொல்லும் சோதிடன்.


யாரும் சோதிடம் பார்க்க அன்று வராத கவலையில் இருந்தான் ஒரு சோதிட பக்தாள்.
ஒரு இளைஞன் அப்போது சோதிடம் பார்க்க வந்தான்.
பக்தாள் முகத்தில் பவர் வந்தது.
நீ நினைத்த காரியம் சுபமாய் முடியும்.
ஒரு தடையும் வராது.
உடனே செயல்படு என்று இளைஞனிடம் சொன்னான் பக்தாள்.
பக்தாளைப் பார்த்து இளைஞன் சொன்னான்
உன் மகளைக் காதலித்தது நான் தான்.
நீங்கள் சொன்னபடியே செய்கிறேன் என்றான்.
சோதிட பக்தாள் சோர்ந்து போனான்.

மலைமேல் கோவில்

பக்தாள் மலை மேல் உள்ள கோவிலுக்கு டாக்சியில் போனான்.
டாக்சியில் கொண்டுவந்த பொருளை வைத்துவிட்டு மலை ஏறிவிட்டான் பக்தாள்.
மலையிலிருந்து டாக்சி டிரைவரை கூப்பிட்டான் பக்தாள்
சத்தமாகக் கத்தினான்
ஆனால் டிரைவருக்கு கேட்கவில்லை.
பக்தாள் தான் புத்திசாலியாச்சே.
அவனிடமிருந்த பைனாகுலரை எடுத்தான்.
அதில் அருகில் தெரியும் பக்கமாக வைத்துக் கொண்டு டிரைவரை வாரும் எனக் கூப்பிட்டான்.
பக்தாளை அங்கிருந்தவர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்துச் சென்றனர்.

பேருந்தில் பக்தாள்

பக்தாள் பஸ்ஸில் போனான்.
டிக்கெட் எடுத்தான்.
கண்டக்டர் சில்லறை கொடுக்கும் போது ஒரு ரூபாய் கூடுதலாகக் கொடுத்துவிட்டார்.
கூடுதலாக கிடைத்த ஒரு ரூபாய் இன்றைய தனது லாபம் என நினைத்தான் பக்தாள்.
சிறிது நேரம் கழித்து கண்டக்டர் வந்தார்
உங்களிடம் ஒரு ரூபாய் கூடுதலாகக் கொடுத்தேனா எனக் கேட்டார்
இல்லை என்றான் பக்தாள்.
நான் உங்களைச் சோதிக்க ஒரு ரூபாய் தெரிந்தே தான் கூடுதலாகக் கொடுத்தேன்
நேற்று உங்கள் கட்சி கூட்டத்தில் உங்கள் கொள்கையை விளக்கி நீங்கள் பேசியதைக் கேட்டேன் என்றார் கண்டக்டர்.

ஏசி தியேட்டர்

ஏசி தியேட்டருக்கு படம் பார்க்கப் போனார் பக்தாள்.
திடீரென ஏசி நின்றுவிட்டது.
ஏசிக்கு காசு வாங்கினீர்களே என பக்தாள் கொதித்தார்.
மீண்டும் ஏசி போட்டார்கள்
தனது போராட்ட குணத்தை எண்ணி பெருமை கொண்டார் பக்தாள்.
மீண்டும் ஏசி நின்றது.
இப்போது ரெம்பக் குதித்தார் பக்தாள்.
ஏசி ஓடவில்லை
படம் ஓடியது
ஆனால் அமைதி.
ஓடிய படத்தை நிறுத்திவிட்டு செக்ஸ் படம் போட்டுவிட்டான் தியேட்டர் காரன்.
செக்ஸ் படம் போட்ட பிறகு பக்தியாவது? ஏசியாவது?
ரொம்ப நன்னாருக்கு என்று பக்தாள் மணம் பரவசமடைந்தது.
நடிச்சவனுக்கும் வேர்த்தது
பக்தாளுக்கும் வேர்த்தது.

பக்தாள் ஒரு தற்குறி எம் எல் ஏ.


ஆசிரியர் தினவிழாவிற்கு சிறப்பு விருந்தினராப் போனாரு.
ஆசிரியப் பெருமக்கள் பெருந்திரளா அமர்ந்திருந்த அவை அது.
பக்தாள் பேசத் தொடங்கினார்
நோட்டீஸில் இருந்த பெயர்களை எல்லாம் அவர்களே அவர்களேன்னு சொல்லிட்டு
கடைசியா டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களேன்னு சொன்னார்.
இராதாகிருஷ்ணனும் கூட்டத்துக்கு வந்த ஆளுன்னு பக்தாள் நெனச்சுக்கிட்டாரு.
டாக்டர் இராதாகிருஷ்ணன் நினைவாகத்தான் ஆசிரியர் தினம் கொண்டாடுறாங்கன்னு அந்த முட்டாக் கூந்தலுக்குத் தெரியல.
அரங்கமே ஒரே சிரிப்பு.

படிப்பு வரவில்லை.

பக்தாள் மகனுக்கு படிப்பு வரவில்லை.
உனக்கும் படிப்புக்கும் வெகுதூரம் என்று ஆசிரியர் கோபித்துக் கொண்டார்.
ஆசிரியர் கூறியதை பக்தாள் தகப்பனிடம் மகன் கூறினான்.
அதற்கு மகனைப் பார்த்து பக்தாள் சொன்னான்.
இதற்காகவா கவலைப்படுகிறாய்.
நாளையிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு எனது வண்டியில் போ.
தூரம் குறையும் என்றான்.
இப்போது இருவரும் சேப்பாக்கம் போய் கொண்டிருக்கிறார்கள்

மதசார்பற்ற கட்சி

#பக்தாள் - தலைவரே.. நம்ம கட்சி ஒரு மதச்சார்பறற்ற கட்சிதான் தலைவரே.
#பக்ததலைவன் - அதெப்புடிடா சொல்ற?.
#பக்தாள் -அடஆமா தலைவரே.. முஸ்லிம் பொண்ணுங்க தன்னோட உடம்ப மறைக்க புர்கா போட்டு வருவாங்க.. மத்த(இந்து, கிறிஸ்டின்) பொண்ணுங்க உடம்ப மறைக்க துப்பட்ா போட்டு வருவாங்க... இந்த Neet Exam ல 3 மதத்து பொண்ணுங்களையும் சமமா நடத்தி, துணிய கழட்டி check பன்னி(மானத்த வாங்கி, அசிங்கப்படுத்தி) அனுப்புனோம்.. அப்ப நம்ம கட்சி ஒரு மதச்சார்பற்ற கட்சிதான தலைவரே..
#பக்ததலைவன். - அட ஆமாண்டா... இது கூட புரிஞ்சிக்க தெரியாம தமிழ்நாட்டு ஆளுங்க நம்ம திட்டிட்டு இருக்கானுங்க.. இதுக்கெல்லாம் காரணம் யாரு?. நம்ம தலைவர் மோடிதான.. வாழ்க மோடி..
#பாரத் #மாதாகி #ஜே.....

50 லட்சம்

இரண்டு நண்பர்கள்!
"உங்க பொண்ணுக்கு 20 லட்ச ரூபாய் செலவு பண்ணி கல்யாணம் பண்ணீங்களே, இப்ப
பொண்ணு எப்படி இருக்கா?
"அவ நல்லாத்தான் இருக்கா. மாப்பிள்ளைதான் பாவம். "50 லட்சரூபாய் தர்றேன்… என்னைக் காப்பாத்துங்க மாமான்னு"கெஞ்சறான்!"

காலைல என்ன சாப்ட்ட

டாக்ர்: "காலையில என்னம்மா சாபபி்ட்ட?"
பெண்: "பீட்ஸா, பர்கர்"
டாக்டர்: "இங்க பாரும்மா! இது ஃபேஸ்புக்கோ, ட்விட்டரோ, வாட்சப்போ இல்ல. ஆஸ்பிட்டல். உண்மைய சொல்லு. என்ன சாப்பிட்ட?"
பெண்: "பழைய சோறும் கருவாட்டுக் கொழம்பும் டாக்டர்."

மூணு மாசம்




#மனைவி :
"கல்யாணம் ஆகி இந்த முப்பது வருஷத்தில நான் என்ன சுகத்தைக் கண்டேன்?"
#கணவன் :
"கணக்குல மூணு மாசம் குறையுதே?"
#மனைவி :
"ஆசை அறுபது நாள், மோகம் முப்பது
நாள். அதை ஏன் சேக்குறீங்க...?"

அப்பா அம்மா

புது டீச்சர் : "பாபு! ஏன் இப்படி சோகமா இருக்க?"
பாபு: "எங்கம்மா ஆஸ்பத்திரில இருக்காங்க."
டீச்சர்: "அப்போ... உன் அப்பா?"
பாபு: "போலீஸ் ஸடேஷன்ல."
டீச்சர்: "அடப் பாவமே! அப்ப நீ வீட்டுக்குப் போறியா?"
பாபு: "ம்ம்ம்..."
பாபு வெளியே சென்றதும்...
டீச்சர்: "அவன் அம்மா ஆஸ்பத்திரிலயும், அப்பா போலீஸ் ஸடேஷன்லயும் ஏன் இருக்காங்கன்னு வகுப்புல யாருக்காவது தெரியுமா?"
சேகர்: "இது அவங்க வீட்டுல டெய்லி நடக்கற விஷயம் தான் டீச்சர்."
டீச்சர்: "என்னப்பா சொல்ற?"
சேகர்: "அவங்கம்மா நர்ஸ். அவங்கப்பா சப் இன்ஸ்பெக்டர்."
அதுனால...கோமால போயிட்ட டீச்சருக்கு பாபுவோட அம்மா, ஆஸ்பத்திரில ட்ரீட்மெண்ட் கொடுக்கறதாச் சொன்னாங்க....

டெலிஃபோன் பில்

ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது.
அவர் தன் மனைவியிடம் கூறினார், "நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனைத்தான் பயன்படுத்துகிறேன். நீதான் அதிகமாக பேசியிருப்பாய்." என கூறினார்.
ஆனால் அவர் மனைவியோ, "நானும் வேலை செய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன். நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம்" என்றார் அவர் மனைவி.
மகனோ, "எனக்கும் நான் வேலை செய்யும் கம்பெனியில் போன் உண்டு. அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன்" என்றான்.
"நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன்" என்றான் மகன். வேலைக்காரியோ, "என்னை எதற்காக திட்டுகிறீர்கள். நானும் உங்களைப்போல் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன்" என கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!!
உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்! இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!???

நிலா மாதிரி

ஏண்டா அம்பி? உனக்கு கல்யாணம் பண்ணிக்கற உத்தேசமே இல்லையாடா அம்பி?"
"இல்லை மாமா, நல்ல பெண்ணா தேடிண்டுருக்கேன்."
" எந்த மாதிரி பெண் வேணும்?"
"எனக்கு நிலா மாதிரி பெண் வேணும்."
" பேஷ்..பேஷ் ! நிலா மாதிரி அமைதியான அடக்கமான பெண் வேணுங்கற.."
"அதுக்காக இல்லை மாமா "
" பின்ன எதுக்கு? நிலா மாதிரி வெள்ளையா அழகான பெண் வேணுமாக்கம் உனக்கு. ம்ம் ஜமாய்"
"அதுக்காகவும் இல்லை மாமா "
( எரிச்சலுடன்) "பின்ன எதுக்குடா நிலா மாதிரி பெண் வேணுங்கற? "
"அது வந்து மாமா, ராத்திரி வந்துட்டு கார்த்தால போறாப்ல மாமா..ஹி..ஹி.."

குறும்புக்கார பையன்

ஒரு ஊரில் ரெண்டு பசங்க இருந்தாங்க.
அவங்க பயங்கர குறும்பு.
எப்ப பாத்தாலும் ஏதாவது சேட்டை பண்ணிகிட்டே இருப்பாங்க. பக்கத்து வீட்டுக்காரங்க அவங்கம்மாகிட்ட வந்து குறை சொல்லிட்டே இருப்பாங்களாம்.
அவங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணியும் அவங்களை திருத்த முடியல.
அப்ப அந்த ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருந்தார். அவங்கம்மா சின்னவனை திருத்தலாம்னு அவரௌகிட்ட கூட்டிட்டு போனாங்க.
அந்த சாமியார பையன் விநோதமா பார்க்க அவர் சிரிச்சிக்கிட்டே கேட்டார், "கடவுளை பாத்திருக்கியா?"
பையன் புரியாம முழிச்சான்.
திரும்பவும் அவர் ,"கடவுள் எங்கிருக்கார்னு தெரியுமா?"ன்னார் லைட்டா முறைச்சிக்கிட்டே.
பையன் லேசா கலவரமாயிட்டான். அவர் விடாம, "சொல்லு! கடவுள் எங்கிருக்கார்?" என்று கேட்டார்.
பையன் பயத்தில அழ ஆரம்பிக்க அவங்கம்மாவுக்கோ ஆச்சர்யம்.
அவர் அப்புறமும், "கடவுள் எங்கே சொல்லு. கடவுள் எங்கே?"-ன்னு கேட்க, பையன் சத்தம் போட்டு அழுதுகிட்டே வேகமா ஓடினான் வீட்டை நோக்கி.
வீட்டுக்குள்ளே அண்ணன் ரூமுக்கு போய் வேகமா கதவ சாத்திட்டு பயத்தோட நிக்க, அண்ணன் கேட்டான், "என்னடா பிரச்னை? ஏன்டா இப்டி ஓடி வரே?" என்று.
"அண்ணே! நிலைமை மோசமாய்டிச்சி." என்றான் தம்பி.
"என்னாச்சுடா?"
"கடவுளை காணோமாம்."
"அதுக்கு?"
"எல்லோரும் நம்மளை சந்தேகப்படறாங்க."

வைர தோடு, மூக்குத்தி


"அய்யய்யோ! என் வைரத் தோடு, மூக்குத்தி எல்லாத்தையும் காணோம்."
"அதுக்கு ஏன்டி ஊரை கூட்டற மாதிரி ஒப்பாரி வைக்கிற? நான்தான் எல்லாத்தையும் வித்துட்டேன்"
"அடப்பாவி மனுஷா. ஏன்யா அப்படி செஞ்சே?"
"உன்னோட அப்பா சொன்னபடிதான் அப்படி செஞ்சேன் "
"அப்படி என்ன சொன்னார் என் அப்பா?"
"மாப்பிள்ளை! என் பொண்ணு முகத்தில புன்னகையை தவிர வேற எதையும் நான் பார்க்கக் கூடாதுன்னு சொன்னார்"

அரசியல்வாதி

ரவுடி : "நீங்க சொன்ன மாதிரியே அஸிஸ்டெண்ட் கமிஷனரைப் போட்டுத்தள்ளிட்டோம் தலைவா"
அரசியல்வாதி : "நான் எப்படா சொன்னேன்?"
ரவுடி : "டென்ஷனா இருக்கு. ஏ.சியைப் போடுங்கடான்னு நீங்கதானே தலைவா சொன்னீங்க".

காத்தடி

செந்தில்: "அண்ணே! காத்தடிச்சா ஏன்னே வேர்க்குது?"
கவுண்டமணி: "காத்தடிச்சா எப்படிடா வேர்க்கும்?"
செந்தில்: "நான் சைக்கிளுக்கு காத்தடிச்சேண்ணே."

கொட்டிருச்சு

"இப்பத்தானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க? மறுபடி வந்து இருக்கீங்களே?"
"இப்ப மருந்து கொட்டிடுச்சி டாக்டர்."

எப்படி இருக்கா?

கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, இப்போ அவ எப்படி இருக்கா??
"முழுகாம இருக்கா..!"

யாருகிட்ட? எங்ககிட்டயேவா..!!

டீச்சர் : "ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?"
மாணவன்: "கரண்ட்டு இல்ல டீச்சர்."
டீச்சர் : "வெளக்கு, மெழுகுவர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?"
மாணவன்: "ஆமா டீச்சர். முயற்சி பண்ணினேன். ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை டீச்சர்."
டீச்சர் : "ஏன்?"
மாணவன்: "அது பூஜை ரூமுல இருந்தது."
டீச்சர் : "உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?"
மாணவன்: "இல்ல டீச்சர். நான்தான் குளிக்கலைல்ல. அப்புறம் எப்பிடிப் போறது?"
டீச்சர் : "குளிக்கலையா....ஏன்?"
மாணவன்: "மேல் தொட்டில தண்ணியில்ல."
டீச்சர் : "மோட்டார் போட்டு தண்ணீர் ஏத்த வேண்டியது தானடா? சோம்பேறி...!! எரும"
மாணவன்: "டீச்சர்! லூசு மாதிரிப் பேசாதீங்க டீச்சர். அதான் முதல் பதில்லையே சொன்னேனுல்ல கரண்டு இல்லன்னு."

நீட் தேர்வு

"குருநாதா, கொஞ்ச நாளைக்கு நீட் தேர்வப் பத்தி பேசாம கம்முன்னு இருங்க குருநாதா! 
அதெல்லாம் நல்லா படிக்கிற பசங்க பிரச்சனை குருநாதா! நீங்க 20% மார்க் கூட வாங்கலைன்னு அசிங்கமா பேசுவாய்ங்க குருநாதா!"

ஓய்வு பெற்ற நீதியரசர்

"ஓய்வு பெற்ற நீதியரசர் இப்ப ஆத்ம திருப்திக்காக ஜோசியம் ஜாதகம் பார்க்கிறாரு!"
"சரி, அதுக்கு என்ன இப்ப?"
"முகூர்த்த நாள் குறிச்சி கொடுங்கன்னு அவருக்கிட்ட போனோம்"
"என்னாச்சு?"
"அடுத்த முகூர்த்த நாளான்னிக்கு வாங்க. உங்க வீட்டுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிச்சித் தரேன்னு வாய்தா சொல்லி அனுப்பிட்டாரு!"

சூப்பர் ஹிட் திரைப்படம்

"ஆயிரம் சொல்லு! நம்ம படத்தை சன் டிவில போடப் போறாங்கன்னு தெரிஞ்சா ஒரு சந்தோஷம் வரத்தான் செய்யுதுப்பா!"
"அதுல என்னண்ணே ஸ்பெஷல் இருக்கு?"
"பின்ன, ரெண்டு நாள்கூட ஓடாத படமா இருந்தாலும் சூப்பர்ஹிட் படம்னு ரெண்டு மூணு நாளாவது போட்டுட்டே இருப்பாங்களே அதைப் பாத்தா ஆனந்தம் வராம இருக்குமா சொல்லு!"

ரயில் விபத்து

நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான பக்தாள்ஜி விசாரணை நடந்தது. 
விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். 
தண்டவாளத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று பக்தாள்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். 
அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. அப்படியே அவன் மீது ரயிலை ஏற்றிவிட்டு சென்றிருக்கலாமே என்று நீதிபதி சொல்லவே, பக்தாள்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன், அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி ஓட ஆரம்பித்தான் என்றார்.

ஆட்டோ வருமா?

"ஆட்டோ வருமாப்பா?"
"வரும் சார். எங்க போகணும்?"
"அதோ! ரெண்டு நாய் சண்டை போட்டுகிட்டிருக்கில்ல. அதைத் தாண்டி விடணும்!"

ஃபேஷன்

அம்மா:
முடிய நீளமா வளத்துகிட்டு ரப்பர் பேண்டெல்லாம் மாட்டிட்டு மீசைய மழிச்சிட்டு அலையாதன்னா கேக்குறியா.
பையன்: 
இதுதாம்மா இப்போ ஃபேஷன்
அம்மா:
நாயே .... உங்க அக்காவ பொண்ணுபாக்க வந்தவன் உன்ன பிடிச்சிருக்குண்ணு சொல்லிட்டு போயிட்டான்டா

ரூபாய் நோட்டு

ஆசிரியர் : "ரூபாய் நோட்டப் பத்தி
மூணு வரில ஏதாவது சொல்லு."
மாணவன் : "RBI அடிக்குது!
SBI கொடுக்குது!
CBI புடிக்குது!"

ஓய்வு

#முதலாளி: "டேய் முனியா! நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்கோ."
#முனியன்: "உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே?"

விவசாயி பேட்டி

டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க...
" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? "
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "
" வெள்ளைக்கு..! "
" புல்லு..! "
" அப்ப கருப்புக்கு..?! "
" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "
" இதை எங்கே கட்டி போடறீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" வெள்ளையை..! "
" வெளில இருக்குற ரூம்ல..! "
" அப்ப கருப்பு ஆட்டை..?! "
" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "
" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" கருப்பு ஆட்டை..! "
" தண்ணில தான்...! "
" அப்ப வெள்ளையை..?! "
" அதையும் தண்ணிலதான்..! "
பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்..
" லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே
செய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப
வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?!! "
" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!! "
" அப்ப கருப்பு ஆடு..?!! "
" அதுவும் என்னுதுதான்..!! "
" டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!! " ߘ