Exam Result

மச்சி செமெஸ்டர் ரிசல்ட் நெட் ல வந்துடுச்சு பார்த்தியா...??
இல்லைடா மச்சி. அப்பா வேற வீட்டில இருக்காரு...
நீ பாத்துட்டு எனக்கு மெசேஜ் பண்றா...!!!
ஒரு அரியர் என்றால் "Good Morning To U" ன்னு பண்ணு.
ரெண்டு ன்னா "Good Morning To U & Ur Dad" ன்னு பண்ணு மச்சி...
ஓகே...!
After Few Minutes:
Friend க்கு வந்த மெசேஜ்...!!!

புத்திசாலிகள் சூழ்ந்திருந்தால்

#இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்த #நரேந்திர மோடி
"உங்கள் மாட்சிமை தங்கிய அதிகாரத்தில் நீங்கள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது #யோசனை சொல்ல முடியுமா?" என்றார்.
"சரி" என்ற ராணி, "அதற்கு #புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
மோடி குழப்பமாகி, "ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் புத்திசாலி என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?" என்றார்.
ராணி, "மிக எளிது; நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே,
இண்டர்காம் பொத்தானை அழுத்தி, "#டேவிட் கேமரூன், தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?" என்றார்.
#டேவிட் கேமரூன் அறைக்குள் வந்து, "சொல்லுங்கள் அம்மா" என்றார்.
#ராணி சிரித்துக் கொண்டே கேட்டார், "டேவிட், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?"
ஒரு கணமும் யோசிக்காமல், டேவிட் கேமரூன், "அது நான்தான் மேடம்" என்றார்.
"நன்றி டேவிட் !" என்று கூறி ராணி அவரை அனுப்பி விட்டு, புன்னகையுடன் மோடி பக்கம் திரும்பி
"பார்த்தீர்களா?" என்றார்.
மோடி தன்னுடைய சுற்றுப் பயணத்தில், தெரியாமல் மீண்டும் இந்தியா வந்தவுடன் #அமித் ஷாவிடம் கேட்டார்,
"அமித், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?"
"உறுதியா தெரியல; நாளைக்கு சொல்றேன்" என்ற அமித் ஷா டவுசர் அனைவரிடமும் கேட்டும் பதில் தெரியாததால் #அரவிந்த்கேஜ்ரிவாலிடம் ஓடி,
"நீங்கள் ஒரு புதிருக்கு பதில் சொல்ல வேண்டும். உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?" என்று கேட்டார்.
கேஜ்ரிவால், "அது நான்தான்!" என்றார்.
விஷயத்தை கேள்விப்பட்ட #அமித் ஷா மோடியிடம் ஓடி,
"எனக்கு விடை தெரியும்" என்றார்.
"சொல்லு".
மோடி அவரைக் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னார்,
முட்டாள்! அது #டேவிட்_கேமரூன் டா!"😁😁😁😁

39ஆம் எண் அறை

ஒரு அழகிய வாலிபன் ஒரு ஹோட்டலுக்குச் சென்று முதலாளியை சந்திக்க விரும்புவதாகக் கூறினான். முதலாளி வந்தவுடன் அவரிடம்.....
"39ம் நம்பர் அறை கிடைக்குமா?"
"கண்டிப்பாக சார்....."
"நன்றி...."
அந்த அறைக்குச் செல்வதற்கு முன் முதலாளியிடம் ஒரு கறுப்பு கத்தி, 39செமீ நீள வெள்ளை நூல் மற்றும் 73கி ஆரஞ்சு ஒன்று தரச் சொல்லி கேட்டான்.
இதைக் கேட்ட முதலாளி மிகுந்த ஆச்சரியத்துடன் ஒத்துக் கொண்டார்.
அறைக்குச் சென்ற அந்த வாலிபன் அதன் பின் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை.
இதில் ஆச்சரியமான ஒன்று எதுவென்றால் முதலாளியின் அறை 39ம் அறைக்கு அருகில்.
நடுநிசியைத் தாண்டியவுடன் முதலாளிக்கு பக்கத்து அறையிலிருந்து பல வினோத சப்தங்கள் கேட்டது. காட்டு மிருகங்களின் கத்தல் மற்றும் பாத்திரங்கள் உருளும் சப்தம் என விதவிதமான ஒலிகள்.
அன்று இரவு முழுவதும் முதலாளி உறங்கவில்லை. விதவிதமான ஒலிக்கு காரணத்தை யோசித்தம் விடை கிடைக்கவில்லை.
அடுத்த நாள் காலை அந்த இளைஞன் அறையைக் காலி செய்து சாவியைக் கொடுத்தவுடன் முதலாளி அந்த அறையை செக் பண்ண சொன்னார்.
அந்த அறை மிகவும் சுத்தமாக பொருட்கள் அதனதன் இடத்தில் இருந்தது. அங்கிருந்த மேசையில் அந்த கறுப்பு கத்தி, வெள்ளை நூல் மற்றும் ஆரஞ்சும் இருந்தது.
பின் அந்த இளைஞன் பில்லை செட்டில் செய்து விட்டு ரூம் பாய்ஸ்க்கும் நல்ல டிப்ஸ் கொடுத்து புன்னகையுடன் கிளம்பி விட்டான்.
முதலாளி இதில் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் அவன் மேல் மிகுந்த சந்தேகமும் அடைந்தார்.
ஒருவருடத்திற்குப் பின் மீண்டும் வந்த அந்த இளைஞன் அதே அறையைக் கேட்டதோடு மட்டும் அல்லாமல் போன முறை போல் கறுப்புக் கத்தி, 39 செமீ வெள்ளை நூல் மற்றும் 73கி ஆரஞ்சும் கேட்டான்.
இந்த முறை எப்படியாவது உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும் என முதலாளி தூக்கம் விழித்து காத்திருந்தார். கடந்த முறை போலவே நடுநிசியைத் தாண்டியவுடன் அதே போல சப்தங்கள் பக்கத்து அறையிலிருந்து வரத் தொடங்கின ஆனால் இந்த முறை கடந்த வருடத்தை விட அதிகமாக இருந்தது.
அடுத்த நாள் முகம் முழுதும் பன்னகையுடன் கை நிறைய டிப்ஸ் கொடுத்து பில்லை செட்டில் செய்து விட்டு அவன் கிளம்பினான்.
இதற்கான காரணங்களை முதலாளி ஆராயத் தொடங்கினார். எதற்காக 39ம் நம்பர் ரூம் எதற்கு கறுப்பு கத்தி வெள்ளை நூல் ஆரஞ்சு என எவ்வளவு மண்டையை உடைத்துக் கொண்டும் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
முதலாளி மிகுந்த ஆர்வத்துடன் அடுத்த வருட மார்ச் மாதத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார். ஆச்சரியமாக மார்ச் முதல் தேதியே அந்த இளைஞன் வந்தான்.
இந்த முறையும் அதே அறை மற்றும் அதே பொருட்களுடன் அறைக்குள் சென்றான்.
அந்த நாள் இரவும் அதே போல பல சப்தங்களோடு முதலாளிக்கு கழிந்தது.
அடுத்த நாள் அந்த இளைஞன் அறையைக் காலி செய்து விட்டு புறப்படுவதற்கு முன் முதலாளி பணிவுடன் அவனிடம் சப்தங்களுக்கான காரணத்தைக் கேட்க அதற்கு அவன்.....
"இந்த உண்மையை உங்களுக்கு சொல்ல வேண்டும் எனில் நீங்கள் கண்டிப்பாக யாரிடமும் சொல்லக் கூடாது...."
"கண்டிப்பாக யாரிடமும் சொல்ல மாட்டேன்..."
"சத்தியமாக......."
"சத்தியமாக யாரிடமும் சொல்ல மாட்டேன்...."
அதற்குப் பின் அவன் சப்தங்களுக்கான காரணத்தை முதலாளியிடம் சொன்னான்.
ஆனா அந்த முதலாளி என்னை மாதிரியே ரொம்ப நம்பிக்கையான ஆளுங்கறதுனால இன்னமும் எங்கிட்ட அந்த இரகசியத்தை சொல்லலை.
அவர் சொன்னோன கண்டிப்பா நான் உங்களுக்கும் சொல்லிடுறேன்......
😝😝😝

பொறுப்பு இல்லாத நாய்

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..
கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...
கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..
. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..
அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...
பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...
கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..
ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..
கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..
இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...
கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...
நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...
கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...
நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....
கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???
அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது