குறும்புக்கார பையன்

ஒரு ஊரில் ரெண்டு பசங்க இருந்தாங்க.
அவங்க பயங்கர குறும்பு.
எப்ப பாத்தாலும் ஏதாவது சேட்டை பண்ணிகிட்டே இருப்பாங்க. பக்கத்து வீட்டுக்காரங்க அவங்கம்மாகிட்ட வந்து குறை சொல்லிட்டே இருப்பாங்களாம்.
அவங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணியும் அவங்களை திருத்த முடியல.
அப்ப அந்த ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருந்தார். அவங்கம்மா சின்னவனை திருத்தலாம்னு அவரௌகிட்ட கூட்டிட்டு போனாங்க.
அந்த சாமியார பையன் விநோதமா பார்க்க அவர் சிரிச்சிக்கிட்டே கேட்டார், "கடவுளை பாத்திருக்கியா?"
பையன் புரியாம முழிச்சான்.
திரும்பவும் அவர் ,"கடவுள் எங்கிருக்கார்னு தெரியுமா?"ன்னார் லைட்டா முறைச்சிக்கிட்டே.
பையன் லேசா கலவரமாயிட்டான். அவர் விடாம, "சொல்லு! கடவுள் எங்கிருக்கார்?" என்று கேட்டார்.
பையன் பயத்தில அழ ஆரம்பிக்க அவங்கம்மாவுக்கோ ஆச்சர்யம்.
அவர் அப்புறமும், "கடவுள் எங்கே சொல்லு. கடவுள் எங்கே?"-ன்னு கேட்க, பையன் சத்தம் போட்டு அழுதுகிட்டே வேகமா ஓடினான் வீட்டை நோக்கி.
வீட்டுக்குள்ளே அண்ணன் ரூமுக்கு போய் வேகமா கதவ சாத்திட்டு பயத்தோட நிக்க, அண்ணன் கேட்டான், "என்னடா பிரச்னை? ஏன்டா இப்டி ஓடி வரே?" என்று.
"அண்ணே! நிலைமை மோசமாய்டிச்சி." என்றான் தம்பி.
"என்னாச்சுடா?"
"கடவுளை காணோமாம்."
"அதுக்கு?"
"எல்லோரும் நம்மளை சந்தேகப்படறாங்க."

0 comments:

Post a Comment