டிடெக்டிவ் ஏஜென்சிக்கான ஆள்சேர்ப்பு

ஒரு டிடெக்டிவ் ஏஜென்சிக்கு ஆள் சேர்ப்பதற்கான நேர்காணலில் மூன்று பக்தாஸ் பங்குபெற்றார்கள். அவர்களை சோதிப்பதற்காக ஒரு அதிகாரி வந்தார். அவர்களில் முதல் பக்தாளை கூப்பிட்டு, “இந்த புகைப்படத்தை 5 வினாடி நன்றாக பார்த்துவிட்டு, இந்த நபரை கண்டுபிடிக்கும் உக்தியை கூறு” என்றார்.
அந்த பக்தாளும் அந்த புகைப்படத்தை நன்றாக பார்த்துவிட்டு, “இது மிகவும் சுலபம், இந்த நபரை எளிதில் கண்டுபிடித்துவிடலாம், ஏனென்றால் இவனுக்கு ஒரு கண் தானே இருக்கிறது” என்றான்.
மேல் அதிகாரிக்கு கோபம் வந்தது, “இது இந்த நபரின் பக்கவாட்டு புகைப்படம் என்பதால் ஒரு கண் மட்டும் தான் புகைப்படத்தில் தெரியும்” என்றார்
பின்பு இரண்டாவது நபரை கூப்பிட்டு, அதேபோல “இந்த புகைப்படத்தை 5 வினாடி நன்றாக பார்த்துவிட்டு, இந்த நபரை கண்டுபிடிக்கும் உக்தியை கூறு” என்றார்.
இரண்டாவது பக்தாளும் அந்த புகைப்படத்தை நன்றாக பார்த்துவிட்டு, “இது மிகவும் சுலபம், இந்த நபரை எளிதில் கண்டுபிடித்துவிடலாம், ஏனென்றால் இவனுக்கு ஒரு காது தானே இருக்கிறது” என்றான்.
இப்போது அதிகாரிக்கு கோபம் முற்றிவிட்டது, “இது இந்த நபரின் பக்கவாட்டு புகைப்படம் என்பதால் ஒரு காது மட்டும் தான் புகைப்படத்தில் தெரியும்” என்றார்
மிகவும் சோர்வடைந்து, ”சரி மூன்றாவது நபர் என்ன செய்கிறான் பார்ப்போம்” என்று எண்ணி, மூன்றாவது பக்தாளை அழைத்து, “புகைப்படத்தை நன்றாக பார், வேண்டுமானால் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டாவது இந்த நபரை கண்டுபிடிக்கும் உக்தியை கூறு” என்றார்.
மூன்றாவது பக்தாள் அந்த புகைப்படத்தை நன்றாக பார்த்துவிட்டு, “இது மிகவும் சுலபம், இந்த நபரை எளிதில் கண்டுபிடித்துவிடலாம், ஏனென்றால் இவன் காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறான்”  என்றான்
உயர் அதிகாரிக்கு இந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை, உடனடியாக ஓடோடிச் சென்று தன் கோப்புகளில் அந்த கைதியின் விவரங்களை சரிபார்த்தார். என்ன ஆச்சரியம்! அந்த நபர் உண்மையிலேயே காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்.
ஆச்சரியத்தோடு வந்து மூன்றாவது பக்தாளிடம், “எப்படி நீ அவன் காண்டாக்ட் லென்ஸ் அணிபவன் என்று கண்டுபிடித்தாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த மூன்றவது பக்தாள், “இதிலென்ன ஆச்சரியம், ஒரே ஒரு கண்ணும், ஒரே ஒரு காதும் இருப்பவன் மூக்குக் கண்ணாடி அணியமுடியாது அல்லவா, அதான் அவன் காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பான்” என்று உறுதியாக கூறினேன் என்றான்.

0 comments:

Post a Comment