24x7

ஹலா... குட்மார்னிங்
குட்மார்னிங். நீங்க
சார் நாங்க .......... பேங்க்ல இருந்து பேசுறோம்
ஓகே.. இப்ப அதுக்கென்ன?
சார் நீங்க தானே ....
ஆமா
உங்க மொபைல் நம்பர் இதானே
இது தெரியாமத்தான் கால் பண்ணியா?
அது வந்து சார்.. எங்க பேங்க்ல பர்சனல் லான் கொடுக்கோம்? நீங்க எங்க சார் ஒர்க் பண்ணுறிங்க
நான் 24 X 7
சார் ஏதும் கால் சென்டர்ல ஒர்க் பண்ணுறீங்களா?
இல்ல அது வந்து....
என்ன சார்.. ஏதும் சர்வீஸ் கம்பெனி வைச்சிருக்கிங்களா?
இல்லை... வந்து...
சார்ர்ர்... வேற ஏதும் புதுசா.....
யோவ்... சொல்லவந்ததைக் கேட்காமல் நீயே ஏதேதோ சொல்லிக்கிட்டு இருக்கே..
சரி சரி சொல்லுங்க சார்.
நான் 24x7 நேரமும் ஃபேஸ்புக்ல தான்...
டக்... போனை வச்சுட்டாங்க....

0 comments:

Post a Comment