3 பீர்

ஒருவர் ஒரு டாஸ்மாக் கடைக்கு வந்து “3 பீர்” என்று ஆர்டர் செய்தார்
 3 பீர் கொண்டுவந்ததும், “சியர்ஸ்” என்று சொல்லி மூன்றையும் அந்த நபர் குடித்தார்
அப்போது, “யாரிடம் சியர்ஸ் சொல்லுகிறீர்கள்?” என்று சர்வர் கேட்டார்
“நாங்கள் மொத்தம் 3 நண்பர்கள், மீதி 2 பேர் வேறு ஊரில் இருக்கிறார்கள், தினமும் மாலை 5 மணிக்கு ஒன்றாக குடிப்பது பழக்கம், இருப்பினும் இப்போது அவர்கள் நியாபகமாக நான் 3 பீர் வாங்கி குடிக்கிறேன்” என்றார்
பின் ஒரு நாள் அந்த நபர் மீண்டும் வந்து “2 பீர்” என்று ஆர்டர் செய்தார்
அப்போது அந்த சர்வர் திடுக்கிட்டு, “2 பீர் தானா, அப்படியானால் 1 நண்பருக்கு ஏதேனும் ஆகிவிட்டதா?” என்றார்
சிரித்துக்கொண்டே அந்த நபர், “இல்லை, நான் தான் பீர் குடிப்பதை நிறுத்திவிட்டேன்” என்றார்

0 comments:

Post a Comment