இப்ப சொந்த காரன் வீட்டுக்கு போயிருந்தேன் எல்.கே.ஜி படிக்கும்
அவரது மகனின் ஆங்கில அறிவை என்னிடம் காட்டி பெருமைபட்டுகொள்ள நினைத்தார்.
என்னிடம் ,"தம்பி அவனிடம் இங்கிலீஷ்ல எதாவது பேசுங்களேன்,உங்களுக்கு பதில் சொல்லுவான்" என்றார்.
நான் ஏதும் பேசாமல் இருக்க மீண்டும்,"தம்பி உங்களைத் தான், அவனிடம் இங்கிலீஷ்ல எதாவது பேசுங்களேன்,உங்களுக்கு பதில் சொல்லுவான்" என்றார்.
நான் அந்த சிறுவனிடம்,"ஹாய்...!" என்றேன்.
அந்த சிறுவன்,"ஹலோ..."என்றான்.
நான்,"ஹவ் ஆர் யூ?" என்றேன்
அந்த சிறுவன்,"பைன்,தேங்க்யூ" என்றான்.
அவர் திரும்ப என்னிடம்,"இன்னும் எதாவது கேளுங்க தம்பி,அதெல்லாம் பதில் சொல்லுவான்னு " சொன்னாரு.
"யோவ் உன் மகன் இங்க்லீஷ்ல என்ன கேட்டாலும் பதில் சொல்லுவான்,எனக்கு இங்கிலீஷ்ல அவ்வளவு தான் கேக்க
தெரியும்,ஆளை விடு" ன்னு மனசுக்குள்ளயே திட்டிட்டு வந்துட்டேன்..
0 comments:
Post a Comment