சரியாகச் சொன்னால் தருவாயா?

ஊட்டி மலையில் ஒரு விவசாயி தன் மந்தையை மேய்த்துக்கொண்டு இருந்தார்,
அப்போது திடீரென ஒரு எலிகாப்டரில் ஒரு நபர் வந்து அவர் அருகே நின்றார். அவர் பல கோடி மதிப்புள்ள கோட் சூட் எல்லாம் அணிந்து இருந்தார். அவர் அந்த விவசாயியிடம் “உங்களிடம் சரியாக எத்தனை மாடுகள் இருக்கின்றன என்று நான் கூறினால், உங்களுடைய கன்றுகளில் ஒன்றை நான் எடுத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டார்
சற்று யோசித்துவிட்டு அந்த விவசாயி ”சரி எடுத்துகொள்ளலாம்” என்றார்
அந்த மனிதன் அப்போது தன் மொபைல் ஆப்-இல் ஒரு பொத்தானை அழுத்தினார், அது ஊட்டியின் செயற்கைகோள் புகைப்படத்தை பிடித்தது, அதில் இந்த மனிதனும் அந்த மேய்ப்பனும் இருக்கிற இடத்தை காட்டியது, அவர் பின்பு அந்த இடத்தின் விவரங்களை இஸ்ரோவுக்கு அனுப்புகிறார். பின்னர் அவர் இஸ்ரோவை அழைத்து மொத்தம் எத்தனை உயிரினங்கள் அங்கே இருக்கின்றன என்று கேட்கிறார். 35 என்று பதில் வருகின்றது. 35இல் தன்னையும் மேய்ப்பனையும் கழித்துவிட்டு, மீதமுள்ள 33 என்கிற எண்ணை கூறுகின்றார்.
அந்த விவசாயி சரி, நீங்கள் ஒரு கன்றுக்குட்டியை எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் 
அவர் அந்த கன்றுக்குட்டியை எடுத்து தன் ஹெலிகாப்டரில் ஏற்றுகிறார். அப்போது அந்த விவசாயி, ”நான் உங்கள் பெயரை சரியாக கூறினால் அந்த மிருகத்தை திருப்பிக்கொடுப்பீர்களா?” என்று கேட்கிறார்
“சரி” என்று தலையசைக்கவே, “உங்கள் பெயர் நரேந்திர மோதி” என்கிறார்
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர், “எப்படி சரியாக கண்டுபிடித்தீர்கள்” என்கிறார்
விவசாயி கூறுகிறார், “இது சுலபம், உன்னை அழைக்காமலே நீ வந்தாய், வரி செலுத்துபவர்களின் கோடிக்கணக்கான பணத்தை நீ செலவுசெய்தாய், எனக்கு பல ஆண்டுகளாக தெரிந்த தகவல்களையே எனக்கு கூறினாய்” என்றார்
அது இருக்கட்டும், “இவை ஆடுகள், பசுமாடுகள் அல்ல, ஒழுங்காக என் நாயை திருப்பிக்கொடு” என்றார் விவசாயி

0 comments:

Post a Comment